இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் - தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
தேனி மாவட்டம சின்னமனூர் அருகே குடும்ப தகராறில் விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம சின்னமனூர் அருகே குடும்ப தகராறில் விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர். கன்னிச்சேர்வைபட்டியை சேர்ந்தவர் பிரபு. குடிப்பழக்கம் உடைய இவருக்கும் மனைவி பவித்ராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த தாய் தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரு குழந்தைகள் உயிரிழந்த நிலையில, உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிசைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.