சனீஸ்வர பகவான் கோயில் நடை திறப்பு - சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்

நாகை திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயிலின் நடை இன்றுமுதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-08 05:14 GMT
நாகை திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயிலின் நடை இன்றுமுதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. கோயில் வாசலுக்குள் நுழைந்த பக்தர்கள் அனைவரும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து,  பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இந்நிலையில் 10 வயதுக்கு குறைவானவர்களும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று காரைக்கால் துணை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்