144 தடை உத்தரவை மீறி சேவல் சண்டை : 14 பேர் கைது - 37 பேர் மீது வழக்கு பதிவு

மதுரையில் 144 தடை உத்தரவை மீறி சேவல் சண்டை நடத்திய 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-08 03:02 GMT
மதுரையில் 144 தடை உத்தரவை மீறி சேவல் சண்டை நடத்திய 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அருகே சேவல்சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சேவல் சண்டையில் பங்கேற்ற 14 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 37 பேர் மீது வழக்கு பதிந்து, 5 சேவல்கள் மற்றும் 30 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்