முன்களப் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 350 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகியிருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரைச் சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருவாய்த்துறையின் முதன்மைச் செயலர், நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். Card-1 அதில் கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, 350 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும், Card-2 ஆனால் அவற்றை யாரும் முறையாக பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. விளக்கங்களை கேட்டறிந்த நீதிபதிகள், Card-3 இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த பாதுகாப்பு உபகரணங்கள் முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். Card-4 அவர்கள் முறையாக பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துவதை உறுதி செய்ய வழிமுறைகள் ஏதும் உள்ளதா எனக் கேட்ட நீதிபதிகள், Card-5 வரும் 27ஆம் தேதிக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். Card-6 தவறும்பட்சத்தில் நீதிமன்றமே உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.