தமிழகம் நோக்கி 5 இளைஞர்கள் மஹாராஷ்ட்ராவிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் நடைப்பயணம்

மஹாராஷ்ட்ராவிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரம் நடந்தே தமிழக இளைஞர்கள் 5 பேர் தங்களது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

Update: 2020-05-06 16:37 GMT
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 5இளைஞர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மார்கெட்டிங் பணிக்காக மஹாராஷ்ட்ரா மாநிலத்ததிற்கு சென்று பணியாற்றினர். 2 மாதமாக கொரனோ தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்ததால் அந்த இளைஞர்கள் சாப்பிட வழியின்றி இருந்தனர். அங்கிருந்த சிலர் லாரி மூலம் அவர்களைசொந்த ஊர் அனுப்பமுயற்சித்தனர். ஆனால் அது பலன் அளிக்காததால் வேறுவழியின்றி அங்கிருந்து நடைபயணத்தை மேற்கொண்டனர். பல சிரமங்களுக்கிடையே ராசிபுரம் வரை  நடந்துவந்த இளைஞர்களை ராசிபுரம் பகுதியை சேர்ந்த அர்ஜீனன் என்பவர் அவர்களை ஆதரித்து உணவு வழங்கினார். மேலும் இளைஞர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறார். மஹாராஷ்ட்ராவிலிருந்து சுமார் 200கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்த இளைஞர்களை மீட்டு சொந்த ஊர் செல்ல முயற்சி எடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...
Tags:    

மேலும் செய்திகள்