தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை திறந்து விடக் கோரிக்கை - 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதம்
பழனி அருகே பெரிய கலையம்புத்தூரில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 28 நாட்கள் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.
பழனி அருகே பெரிய கலையம்புத்தூரில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 28 நாட்கள் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. தற்போது அந்த நபர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதேபோல் பாதிக்கப்பட்ட மற்றொருவர் நாளை வீடு திரும்ப உள்ளார். இந்த சூழலில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை திறக்கக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.