கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 28 கர்ப்பிணி பெண்கள், செவிலியர் உள்ளிட்ட 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேருக்கு குணமடைந்து அவர்களது வீட்டில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 23 கர்ப்பிணி பெண்கள் மற்றும் கோயம்பேடு தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 71 பேருக்கு நோய்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.