தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கடந்த ஒரு மாதத்துக்கு மேல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு மேல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரத்து 778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் சுமார் 21 ஆயிரத்து 770 தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க உள்ளதாகவும், அதற்காக 2.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.