ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,68,537 வழக்குகள்

கொரோனா வைரஸ் தடுப்பு தடை நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறுபவர்கள் மீது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Update: 2020-04-23 07:45 GMT
* கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் தடை காலத்தில், 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

* விதிகளை மீறியதாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* அரசின் உத்தரவுகளை மீறி சுற்றித் திரிந்தவர்களிடமிருந்து 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* கடந்த  ஒரு மாத காலத்தில், கொரோனா தடுப்பு தடைகளை மீறியதாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

* தடை உத்தரவுகளை மீறியவர்களிடமிருந்து அபராதக் கட்டணமாக 2 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரத்து 954  ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்