போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி - குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை
பெரம்பலூரில் காவலராக இருந்த ஒருவர் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார்.
பெரம்பலூரில் காவலராக இருந்த ஒருவர் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார். பின் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு சேலத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் அவரது சொந்த கிராமும் தனிமை படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்புக்குள்ளான காவலர் டெல்லி மாநாட்டிற்கு சென்ற ஒருவருக்கு காவல் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.