"ஏப்ரல்-20 முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும்" - போதிய நேர இடைவெளியில் பாதுகாப்பாக பதிவு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சார்பதிவாளர் அலுவலங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சார்பதிவாளர் அலுவலங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொது மக்களும் முகக்கவசம் அணிந்து அலுலகத்திற்குள் நுழைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப்பணிகளை மேற்கொள்ளும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அலுவலகத்திற்கு வெளியே தேவையின்றி மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் ஏற்கனவே உடல்நலம் குன்றியுள்ளவர்களை பதிவு பணிக்கு நியமிக்க வேண்டாம் என்றும், 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பொது மக்களுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன்கள் வீதம் ஒரு நாளைக்கு 24 டோக்கன்கள் என போதிய நேர இடைவெளியில் பாதுகாப்பாக பதிவு பணிகளை மேற்கொள்ள சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள சுற்ற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.