தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு - மாநிலம் முழுவதும் 2,14,951 பேர் மீது வழக்குகள் பதிவு

கொரோனா ஊரடங்கை மீறியதாகக் கூறி தமிழகம் முழுவதும் 2 புள்ளி 28 லட்சம் பேர் கைதாகி விடுதலையான நிலையில், அவர்களிடம் இருந்து 1 கோடியே 6 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-18 09:11 GMT
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறது. 

* தற்போது வரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 951 வழக்குகள் பதிவு செய்த போலீசார்,2 லட்சத்து 28 ஆயிரத்து 823 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

* தடையை மீறியதாக ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

* அவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 1 கோடியே 6 லட்சாத்து 74ஆயிரத்து 294 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்