கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக வதந்தி : சமூக ஆர்வலர் புகார் - போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற சமூக ஆர்வலர் கொரோனா தொற்றால் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற சமூக ஆர்வலர் கொரோனா தொற்றால் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளது. இதனைப் பார்த்த பலரும் அவரை தொடர்பு கொண்டு விசாரித்து மட்டுமின்றி, சிலர் நேரிலேயே மாலை வாங்கி கொண்டு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து சங்கரலிங்கம், அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வதந்தி பரப்பியவர்களை தேடி வருகின்றனர்