60 நரிக்குறவ இன குடும்பங்களுக்கு சொந்த பணத்தில் போலீசார் உதவி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மொட்டமலை பகுதியில் வசித்து வரும் சுமார் 60-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பத்தினர் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மொட்டமலை பகுதியில் வசித்து வரும் சுமார் 60-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பத்தினர் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்த ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவலர்கள் சேர்ந்து, சொந்த பணத்தில் தலா 750 ரூபாய் மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள் மற்றும் முக கவசங்களை அவர்களுக்கு வழங்கினர்.