"அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும்" - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
ஆம்பூர் நகர பகுதிகள் கட்டுபடுதப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்ட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளளார்.
கொரோனா தோற்று அதிகம் உள்ள பகுதியான ஆம்பூர் நகரம் முழுவதும் கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்நது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், ஆம்பூரில் பொதுமக்கள் வெளியே வர வேண்டிய அவசியமில்லை எனவும்
88 வாகனங்கள் மூலம் மளிகை, காய்கரி, மருந்து உள்ளிட்ட அணைத்து பொருட்களும் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் என்றும் கூறினார்.
இதேபோல் ஊரடங்கை மீறி வெளியே வந்தால் கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.