"எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் நிதி ஏற்க மறுப்பு" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்க மறுத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-07 11:06 GMT
அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்க மறுத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், தமிழக அரசின்​ தலைமைச் செயலாளருக்கு எம்எல்ஏ செந்தில் பாலாஜி எழுதியுள்ள கடிதத்தின் நகலை பகிர்ந்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனைக்கு 10 வென்டிலேட்டர்கள் வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலில் அத்தொகை ஏற்கப்பட்டது, ஆனால் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்டது அல்ல என்பதால் கரூர் அரசு மருத்துவமனைக்கான நிதியை ஏற்கமறுத்து மாவட்ட நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அரவக்குறிச்சியில் பாதிக்கப்பட்டாலும் கரூர் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர்காக்கும் நேரத்திலும் அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுவது சரியல்ல எனவும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்