"கொரோனாவால் சிறு தொழில் பாதிப்பு இல்லை" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு

கொரோனா வைரஸால் தமிழக்ததில் சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2020-03-19 09:56 GMT
கொரோனா வைரஸால், தமிழக்ததில் சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அவர், வெளிநாடு சென்று திரும்பிய பயணிகளால் தான் கொரோனா பரவுகிறதே தவிர, உள்ளூர் மக்களால் இல்லை என்றார். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்