கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையா? : ஆண்டுகளாக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெறவில்லையா? - அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியது உண்மைதானா?

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களிலும், நம்மை சுற்றி உள்ளவர்களின் பேச்சில் வெளிப்படும் தகவல்களிலும் எவ்வளவு உண்மை இருக்கிறது.

Update: 2020-03-19 07:24 GMT
தமிழக சட்டபேரவையில் 17ஆம் தேதி அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேசிய காட்சி இது. மீன்வளத்துறை மீது காரசாரவிவாதங்கள் நடைபெற்ற போது, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் 
நடத்தும் தாக்குதல்  குறித்து திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ் மணியன்  கடந்த 7ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெறவில்லை என்றார். இந்தியா - இலங்கை இடையிலான கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வரும் நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவங்கள் வரலாற்றில் பதிவானவை.இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறுவது உண்மைதானா...

இந்த கேள்விக்கு விடை என்ன?

ஓ.எஸ் மணியன் கூறும் தகவல்கள்  பற்றி ஆராய்ந்த போது,அவர் சொல்வது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது.  
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிஜ்ஜோ உள்ளிட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டது. அதில் பிரிஜ்ஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவர் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி பிரிஜ்ஜோவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது வரலாறு . 

மேலும் கடந்த மாதம் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது . அதில் படகில் உள்ள   கண்ணாடியில் துப்பாக்கி குண்டு பட்டு கண்ணாடி உடைந்து தெறித்து  ஜேசு என்ற மீனவரின் கண்ணில் குத்தியது இதனால் பாதிக்கப்பட்ட மீனவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் பலமுறை எல்லை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்கதாகக் கூறி  இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கியும் மீனவர்களின் படகை நோக்கியும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாக புகார்கள் எழுந்தன. 

எனவே கடந்த 7 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என சட்டபேரவையில் ஓ.எஸ் மணியன் கூறியது தவறான தகவல்.  

மூன்றாண்டுகளுக்கு முன்பும் அதன் பிறகும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது என்பதே உண்மை .. 

Tags:    

மேலும் செய்திகள்