திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு
திருப்பூரில் ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூரில், ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருப்பூரில் கொரோனா தொடர்பாக ஆய்வுகள் நடத்த, போதிய வசதிகள் இல்லை என தெரிவித்த மருத்துவர்கள், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே108 ஆம்புலன்சில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் சுமார் 4 மணிநேரம் திருப்பூர் அரசு மருத்துவமனையிலேயே அந்த இளைஞர் காத்திருக்க வைக்கப்பட்டார். பின்னர், ஆம்புலன்ஸ் பைலட் மற்றும் மருத்துவ உதவியாளர் என இருவரும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு, அந்த இளைஞரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.