மக்கள் நல பணியாளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2020-03-16 08:51 GMT
தமிழகத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நல பணியாளர்களை மீண்டும்  வேலைக்கு அமர்த்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை  உடனடியாக விசாரிக்கக்கோரி, விழுப்புரத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவர் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஏற்கனவே மார்ச் 3ஆவது வாரம் வழக்கு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், இதுதொடர்பாக பதிவாளரிடம் முறையிடப்பட்டது. இதனையேற்ற உச்சநீதிமன்ற பதிவாளர், அவசர வழக்கு பட்டியலில் இடம்பெறச் செய்வதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்