ராணுவ கட்டுப்பாட்டு பகுதியில், வெளி வாகனங்களுக்கு தடை: "கொரோனா தாக்கம் எதிரொலியாக பாதுகாப்பு நடவடிக்கை"
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பகுதியில், வெளி வாகனங்கள் செல்ல தடை விதித்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பகுதியில், வெளி வாகனங்கள் செல்ல தடை விதித்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக, வெலிங்டன் முகாம் உள்ளிட்ட ராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்கா, படகு இல்லம் மற்றும் அருங்காட்சியகம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல, வரும் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.