முருகன் கோவிலில் 10 கிலோ வெள்ளி கவசம் கொள்ளை - போலீசார் விசாரணை

சென்னை ஆவடி உள்ள முருகன் கோவிலில் 10 கிலோ வெள்ளி கவசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-14 10:36 GMT
சென்னை ஆவடி உள்ள முருகன் கோவிலில், 10 கிலோ வெள்ளி கவசம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆவடி அருகே வீராபுரம் சாலையில், பழமைவாய்ந்த பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு, பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் சுமார் 10 கிலோ எடையுள்ள வெள்ளி கவசம் மற்றும் உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து புகார் அளித்த நிலையில், கோவிலின் சிசிடிவியை ஆய்வு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்