எரிவாயு நிரப்பும் நிலையம் தொடங்க மாநகர காவல் ஆணையர் பெயரில் போலி தடையில்லா சான்று - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிர்ச்சி தகவல்

எரிவாயு நிரப்பும் நிலையம் தொடங்க சென்னை காவல் ஆணையர் பெயரில் போலி தடையில்லா சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2020-03-12 21:02 GMT
சென்னை சின்னமலையில் வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் நிலையம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்டீபன் டென்னிஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடியிருப்பு, மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியில் எரிவாயு நிரப்பும் நிலையம் அமைக்க காவல் ஆணையர் அளித்த தடையில்லா சான்றின் அடிப்படையில், நாக்பூரில் உள்ள வெடி மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் உரிமம் வழங்கியதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்த போது, காவல் ஆணையர் அளித்த தடையில்லா சான்று போலி  எனவும், இது சம்பந்தமாக வேறு சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்