"வெயிலுக்கும் வைரசுக்கும் தொடர்பு இல்லை" - சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

கொரோனா வைரஸைவிட அதன் தொடர்பான வதந்திகள் வேகமாக பரவி வரவதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்தார்.

Update: 2020-03-12 12:07 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதித்தனர். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா வைரஸைவிட, அது தொடர்பான வதந்திகள் வேகமாக பரவுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள நிலையை, அவ்வப்போது, சுகாதாரத்துறை வெளிப்படையாக வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஜனவரி மாதத்தில் இருந்தே, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். தொற்று நோய் என்பதால் கொரோனா வைரசுக்கும், வெயிலுக்கும் தொடர்பு இல்லை என விளக்கம் அளித்த அவர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்