"சேலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை" - மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர்

சேலம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார்.

Update: 2020-03-10 19:23 GMT
சேலம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், வீண் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றும் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு, சிகிச்சை அளிக்க பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோர் பிரத்யேக மருந்தினை கொண்டு, கைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்