"புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை" - சுகாதாரத்துறை அமைச்சர் டுவிட்டரில் பதிவு

தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-10 09:45 GMT
தமிழகத்தில், புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், எட்டு பேரின் இரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் கொரோனா கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்