வெளிநாடுகளிலிருந்து கோவை வந்த மூவருக்கு கொரோனோ அறிகுறி - சளி, ரத்த மாதிரிகள் கொண்டு தீவிர ஆய்வு

வெளிநாடுகளிலிருந்து கோவை வந்த மூவருக்கு கொரோனோ அறிகுறி தென்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

Update: 2020-03-09 18:09 GMT
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த மூவருக்கு கொரோனோ அறிகுறி தென்பட்டதை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக, மலேசியாவில் இருந்து கோவை வந்தவரை பரிசோதித்த போது, அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அறிந்த மருத்துவ குழுவினர், அவரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனி பிரிவில் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அவரது சளி மாதிரிகளை பரிசோதனைக்காக சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்யூட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதே போல், சார்ஜா, மற்றும் வங்கதேசத்திலிருந்து கோவை வந்த இருவரின், சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்