வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் - கையும் களவுமாக பிடிபட்ட 2 காவலர்கள்
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு காவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு காவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே அசோக் என்பவர் தனியார் பொருட்கள் பாதுகாப்பு அறை நடத்தி வருகிறார். இந்நிலையில் அங்கு வைக்கப்பட்ட மடிக்கணினியுடன் அடங்கிய பை ஒன்று காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட திருவண்ணாமலை உதவி ஆய்வாளர் இளஞ்செழியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.