சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் போராட்டம் - அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத் தொடர்ந்த வழக்கில், திருப்பூரில் நடைபெறும் சட்டவிரோத போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யலாம் என காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.