திருப்பத்தூர் அருகே பல லட்சம் மோசடி - இளைஞர் மீது புகார்
திருப்பத்தூர் அருகே, பல லட்சம் மோசடி செய்த இளைஞர் மீதான புகாரை வாங்க மறுப்பதாக கூறி, பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர் அருகே, பல லட்சம் மோசடி செய்த இளைஞர் மீதான புகாரை வாங்க மறுப்பதாக கூறி, பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ஏரிகோடி திருமால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் என்பவர், தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்ததாக திருப்பத்தூர் கிராம காவல் நிலையத்தில் பெண்கள் உட்பட 35 பேர் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரை, போலீசார் வாங்க மறுப்பதாக கூறி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தின் போது, ஒரு பெண் மயக்கம் அடைந்ததால் பரபரப்பானது. காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின், யதால் அனைவரும் கலைந்து சென்றனர்.