கரூர் : பார்வையாளர்களை கவர்ந்த மாட்டு வண்டி பந்தயம்
கரூரில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
கரூரில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பெரியமாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகளும், சிறிய மாடுகள் பிரிவில் 17 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.