8ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பலி - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அரசு மேல் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷின் மகன் ரஞ்சித், ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.