விசில் போட்டி நடத்திய அமைச்சர் - மாணவர்களுடன் போட்டி போட்டு விசில் அடித்த எம்எல்ஏ
புதுக்கோட்டையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவிகளுக்கு, பரிசுகளை வழங்கினார்.
புதுக்கோட்டையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவிகளுக்கு, பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் செய்ய முடியாத, துணிச்சலான முடிவாக, காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ளதாக கூறினார். இதனிடையே, மாணவர்கள் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டிருக்க, குறுக்கிட்டு பேசிய அமைச்சர், மாணவர்களுக்கும், கந்தர்வகோட்டை எம்எல்ஏ இடையே சத்தமாக விசில் அடிக்கும் போட்டி என கூறினார். பின்னர், மாணவர்களுடன், எம்எல்ஏ ஆறுமுகம் போட்டி பேட்டு விசிலடித்த, சம்பவம் அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.