காதலியின் தலையில் கல்லை போட்டு கொலை - காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
காதலியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காதலியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கரூர் மாவட்டம் சங்கரம்பாளையத்தை சேர்ந்த பேபி என்ற பெண்ணை காதலித்த அன்பரசு என்பவர், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். வற்புறுத்திய பேபியை வாய்க்கால் தண்ணீரில் தள்ளிய அன்பரசு தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அன்பரசுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.