சிறப்பு பயிற்சியாளர்கள் இல்லாமல் தவிக்கும் விளையாட்டு வீராங்கனைகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு பயற்சியாளர்கள் இல்லாத அவல நிலை நீடித்து வருகிறது.
கலர் கிராமத்தை சேர்ந்த ஷாலினி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊசூ தற்காப்பு கலை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். ஷாலினியை போலவே பல பெண்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி எடுக்கின்றனர். இருப்பினும் அவர்களுக்குகென தனி பயிற்சியாளர் , பிரத்யேக உபகரணகங்கள் இல்லாத காரணத்தால் பலரின் திறமை வீணடிக்கப்படுகிறது. சிறப்பு பயிற்சியாளர்களை நியமித்து போதிய வசதிகளை அரசு செய்து கொடுத்தால் , தங்களால் நிச்சயம் தேசிய அளவில் ஜொலிக்க முடியும் என வீராங்கனைகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.