"விரைவில் நகரும் ரேஷன் கடைகள்" - பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
தமிழகத்தில் பகுதி நேரத்திற்கு மாற்றாக, நகரும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பகுதி நேரத்திற்கு மாற்றாக, நகரும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தி.மு.க உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முதற்கட்டமாக, திருச்சி பள்ளிவாயலில் நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என்றார். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.