திருவண்ணாமலை : விமரிசையாக நடந்த காளை விடும் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் வடுகசாத்து கிராமத்தில், காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வடுகசாத்து கிராமத்தில், காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராமத்தின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், 500க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து ஓடின. இந்த காளைவிடும் திருவிழாவை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுரசித்தனர்.