சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல்
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றும் 9 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவான கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 75 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 55 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 20 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது நீதிபதிகளாக உள்ள 55 பேரில், கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றும் நீதிபதிகள் ஆஷா, நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன், புகழேந்தி , செந்தில் குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகிய 9 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற
கொலிஜியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்த பின் 9 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.