இயற்கை விவசாயம் செய்த மூதாட்டிக்கு "பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது" வழங்கி தமிழக அரசு கவுரவம்
நெல்லை மாவட்டம் பணகுடியில், பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்த மூதாட்டிக்கு, "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்" என்ற விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடியில், பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்த மூதாட்டிக்கு, "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்" என்ற விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் தமது மகனுடன், பரிவிசூரியன் கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக ரசாயன உரத்தை பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் இவர், ஆத்தூர் கிச்சடி சம்பா, கைவிரல் சம்பா, காட்டுயாணம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நெல்களை பயிரிட்டு வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிட்ட ஆத்தூர் கிச்சடி சம்பா தமிழகத்திலேயே அதிகப்படியாக 8 ஆயிரத்து 455 கிலோ மகசூலை அளித்தது. இது குறித்து, வள்ளியூர் வேளாண்மை துறையினர் பரிந்துரைத்ததன் பேரில், கிருஷ்ணம்மாளுக்கு, 'பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்' என்ற விருது தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.