"தமிழகத்திற்கு இடம் பெயருமா கியா மோட்டார்ஸ்?" - அமைச்சர் சம்பத் விளக்கம்
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்திற்கு இடம் பெயர்வது குறித்து இதுவரை நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என அமைச்சர் சம்பத் கூறியுள்ளார்.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்திற்கு இடம் பெயர்வது குறித்து இதுவரை நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என அமைச்சர் சம்பத் கூறியுள்ளார். கடலூரில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஒருவேளை தமிழகத்தில் இடம்பெயர முன்வந்தால், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுவது போல் ஊக்கத் தொகையுடன் கூடிய சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் கூறினார்.