துணை மருத்துவ படிப்புகளுக்கு தனி பல்கலை. - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

துணை மருத்துவ படிப்புகளுக்கு தனி பல்கலைக் கழகம் அமைப்பது குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2020-02-08 06:33 GMT
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. விரைவில் அது 37 ஆக உயரும் என்று கூறப்படுகிறது. 

* இந்த மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி 500க்கும் மேற்பட்ட துணை மருத்துவ படிப்பு கல்லூரிகளையும் கவனிக்கும் வேண்டிய பணிபளு, எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

* இதனை தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும், துணை மருத்து படிப்புகளுக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

* இதுகுறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

* இந்த புதிய பல்கலைக்கழகம் புதுக்கோட்டையில் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவக் கல்வி வட்டாரம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்