தமிழகம் முழுவரும் உயர்ந்தது டாஸ்மாக் மது பானங்களின் விலை

தமிழகம் முழுவரும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்ந்தது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வாணிப கழகம் வெளியிட்டுள்ளது.

Update: 2020-02-07 09:08 GMT
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன.  தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வரும் இந்த கடைகளில், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபான வகைகளும், பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  அரசின் வருவாயில் மதுபான விற்பனை முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழ்நாடு வாணிப கழம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
`
அதன்படி, குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆஃப் , தற்போது விற்கும் விலையுடன், கூடுதலாக 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

புல் ஒன்று 40 ரூபாயும் உயர்ந்துள்ளது. 

பிராந்தியை தொடர்ந்து பீர் விலையும் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு வருவாயாக கூடுதலாக 3,100 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்