ஊட்டியில் தோடர் இன மக்களின் உப்பு சாஸ்திர விழா
ஊட்டியில் தோடர் இன மக்களின் எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பு சாஸ்திர விழா கொண்டாடப்பட்டது.
ஊட்டியில் தோடர் இன மக்களின் எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பு சாஸ்திர விழா கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், சுமார் 60 கிராமங்களில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றன. இவர்களின் முக்கிய தொழிலாக, எருமை வளர்ப்பு உள்ளதால், அவர்கள் எருமைகளை வழிப்படுகின்றன. இதில், எருமைகளுக்கு உப்பு நீர் வழங்கி, பின்னர் எருமை குடித்த நீரை தீர்த்தமாக அருந்தி, அங்குள்ள கோவிலில் வழிப்பட்டனர். இதை தொடர்ந்து, பாரம்பரிய உடையில் கோவிலை சுற்றிவந்து நடனமாடினர்.