நாகூர் தர்ஹா 163 ஆம் ஆண்டு சந்தனக் கூடு விழா : ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

நாகூர் தர்காவின் 463 ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, சந்தனகூடுக்கு பூக்களை தூவி வழிபட்டனர்.

Update: 2020-02-04 22:00 GMT
நாகை மாவட்டம், நாகூர் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 463 வது கந்தூரிவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினத்திலிந்து நாகூருக்கு வருகை தந்தது.  மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடுக்கு, வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பூக்களை தூவி வழிபட்டனர். நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நாகை மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்