கடன் தொல்லை - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

கடன் தொல்லை காரணமாக சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-01 10:35 GMT
வியாசர்பாடி அருகே ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கரிகாலன். மீன் வியாபாரம் செய்து வந்த இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டிலேயே இருந்துள்ளார். கரிகாலன் மனைவி முனியம்மாள் மற்றும் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் ஆறுமுகம் உடன் வசித்து வந்தனர். கரிகாலனுக்கு ஹரிகிருஷ்ணன் என்ற மகனும் குணவதி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு குணவதியின் திருமணத்திற்காக கரிகாலன் வீட்டை அடமானம் வைத்து 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கரிகாலன் வேலைக்கு செல்லவில்லை. வீட்டை விற்று கடனை அடைக்க கரிகாலன் எடுத்த முடிவிற்கு ஹரிகிருஷ்ணன் கோபித்து கொண்டு  வீட்டை விட்டு சென்றுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் கரிகாலன் வீட்டை விற்று கடனை அடைத்து உள்ளார். இதனை தொடர்ந்து வீட்டை காலி செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால் கரிகாலன் , அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விஷம் அருந்திய ஆறுமுகம் வீட்டின் ஹாலில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.தகவலறிந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்கலையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை சம்பவம் தொடர்பாக உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்