மாமல்லபுரம் : கடும் பனிமூட்டம் - ரம்மியமாக காட்சி அளித்த கடற்கரை கோயில்
மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. காலை 9 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர். சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. இந்த நிலையில் பனிமூட்டத்தின் இடையே, ரம்மியமாக காட்சி அளித்த கடற்கரை கோவிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.