வட்டித் தொழிலில் ஈடுபட்டாரா நடிகர் ரஜினிகாந்த்...?
நடிகர் ரஜினிகாந்த் வட்டிக்கு பணம் கொடுத்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. சமூக வலைதளத்திங்ல டிரண்டிங் ஆகி வருகிறது
வருமான வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் மீதான மேல்நடவடிக்கையை கைவிடப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2002 -2003 மற்றும் 2004 - 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நிதியாண்டில், ரஜினிகாந்த் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாகவும், அதற்கு கிடைத்த லாபத்துக்கு வரி செலுத்தி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில், அந்த கடன் வாராக் கடனாக மாறியதால், எதிர்மறை வருவாயை ரஜினிகாந்த் கணக்கு தாக்கலின் போது குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் 6 பேருக்கு கடன் கொடுத்ததாக வருமான வரி கணக்கு தாக்கலில் இடம் பெற்றுள்ள நிலையில், அதனை நட்பு ரீதியான பணபரிவர்த்தனையாக வருமான வரித்துறை ஏற்று அவருக்கு அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற்றுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் வட்டிக்கு விட்ட விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , ரஜினி வட்டிக்கு பணம் கொடுத்த விவகாரம் சமூக வலைதளத்திங்ல டிரண்டிங் ஆகி வருகிறது.