"ஒரே ஆண்டில்11 மருத்துவக் கல்லூரிகள் - அரசின் சாதனை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"முதலில் 6 மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டுமான பணி"

Update: 2020-01-28 20:27 GMT
தமிழகத்தில் கூடுதலாக 2 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு  மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை பெற்றிருப்பது,  அரசின் சாதனை என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலில் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க உள்ளதாக குறிப்பிட்டார். மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்பதே ஜெயலலிதாவின் கனவு என்றும், அதனை இலக்காக கொண்டு அரசு செயல்பட்டு வருவதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்