8-வது ஆண்டாக நடக்கும் இலவச மருத்துவ முகாம் - சொந்த ஊருக்கு சேவையாற்றும் மருத்துவர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வயிறு மற்றும் குடல் நோய் நிபுணர் மருத்துவர் கே.ஆர்.பழனிசாமி தனது சொந்த ஊர் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வயிறு மற்றும் குடல் நோய் நிபுணர் மருத்துவர் கே.ஆர்.பழனிசாமி தனது சொந்த ஊர் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறார். இந்த முகாமில் பங்கேற்றுள்ள ஒன்பது மருத்துவர்கள், நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குகின்றனர். கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் நோக்கத்துடன் செயல்படும் மருத்துவர் கே.ஆர்.பழனிசாமியின் சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.