தந்தி டிவி செய்தி எதிரொலி : இருளில் மூழ்கிய அனந்தசரஸ் குளம் ஒளி வெள்ளத்தில் மிதப்பு

இருளில் மூழ்கிய நிலையில் இருந்த அத்திவரதர் உள்ள அனந்தசரஸ் திருக்குளம், தந்தி டிவி செய்தி எதிரொலியால், ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.;

Update: 2020-01-24 23:17 GMT
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதர், அனந்தசரஸ் குளத்தில்  உள்ள நீராழாழி மண்டபத்தில்,  பாதுகாப்பாக வைக்கப்பட்டார். அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் அனந்தசரஸ் குளத்தை வணங்கி செல்கின்றனர். இந்த நிலையில் குளத்தில் மின்விளக்கு இல்லாமல் இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர். இதை தந்தி தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டது. இதை தொடர்ந்து வரதராஜப் பெருமாள் கோயிலில்  புதிதாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, அனந்தசரஸ் குளத்தில்  அத்தி வரதர்  வைக்கப்பட்டுள்ள  மண்டபம்,  மின் ஒளியில்  ஜொலிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்